இதுவரை யாரும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 26 திரைப்படங்களில் கமிட்டான விஜய் சேதுபதி…

0

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ட்ரெண்டிங் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.இவர்தான் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் ட்ரெண்டிங்கானா நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். ஹீரோவாக நடித்து வந்த இவர் வில்லன் கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.  இந்த திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சொல்லப்போனால் விஜய் எந்த அளவிற்கு மாஸ்டர் திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாரோ அதைவிடவும் விஜய் சேதுபதி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பொதுவாக, விஜய்சேதுபதி கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் திறமைவுடையவர். எனவே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இத்திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் உப்பண்ணா திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களிலும் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இத்திரைப்படங்களுக்கு பிறகு இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வருகிறது.

அந்த வகையில் முக்கியமாக தெலுங்கிலும் உப்பண்ணா திரைப்படம்தான் சில நாட்களிலேயே பல கோடி வசூலித்து சாதனை படைத்தது. இவ்வாறு இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் இவர் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளாறோ அதேபோல் தனது சம்பளத்தையும் உயர்த்தி வருகிறார். அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததற்காக ரூபாய் 10 கோடி சம்பளமாக பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி இந்திய அளவில் பிரபலமடைந்து உள்ளதால் பாலிவுட்டிலும் நடிப்பதற்காக 2 பட வாய்ப்புகள் வந்துள்ளது. அதோடு வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்க உள்ளாராம் இவ்வாறு தமிழிலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளாராம்.அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் கிட்டத்தட்ட 26 திரைப்படங்களுக்கு மேல் அட்வான்ஸாக பணம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாலிவுட்டில்  மூன்று பாகங்களாக உருவாக உள்ள வெப் சீரியலிற்கு மொத்தமாக 54 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.