தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி ஆவார். இவர் தமிழ் திரையுலகில் ஹீரோ,வில்லன், காமெடி நடிகர் உட்பட அனைத்து ரோலிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவர் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து மாமனிதன், துக்ளக், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக படங்கள் ரிலீஸ் ஆகுவதற்கு தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பல படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது அதுவும் முக்கியமாக பெண்களுக்கு பிடித்தவராக வலம் வருகிறார். இவர் பெரும்பாலும் சிறந்த கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் விஜய் சேதுபதி மனிதன் படத்திற்காக போட்டோ சூட் எடுத்த தனது அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
#Human – A Photoshoot Series by @LRAMACHANDRANhttps://t.co/4NCJmdjdt0@vijayabalaji26 @editorsiddharth @SillyMonks
— VijaySethupathi (@VijaySethuOffl) July 16, 2020