தனுஷை தட்டி தூக்கிவிட்டு பாலிவுட்டில் அலப்பறை கொடுக்கும் விஜய் சேதுபதி..! அப்போ அடுத்து ஹாலிவுட் தானா..?

vijay sethupathi latest news: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் தனுஷ். இவ்வாறு தனுஷை திரைக்கு வந்த சில நேரத்திலேயே அவரை ஓவர்டேக் செய்து வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி.

மேலும் இதன் காரணமாக விஜய்சேதுபதியின் மார்க்கெட் ஆனது மிகவும் உயர்ந்து காணப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் ஹிட் கொடுப்பது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதி பவானி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு அவர் நடித்த கதாபாத்திரம் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் மிக பிரம்மாண்டமாக இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்வதற்காக பல இயக்குனர்கள் முன் வந்துள்ளார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க வைக்க வேண்டும் என விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த மாநகரம் திரை படத்தின் ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதை விட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் நடிகை கத்ரீனா கைஃப்வுடான் விஜய் சேதுபதி ஜோடி போட்டு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

இவ்வாறு திரை உலகில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தனது முகத்தை பதித்த விஜய் சேதுபதி தற்போது மாபெரும் நடிகராக வளர்ந்து உள்ளார்.  இந்நிலையில் நடிகர் தனுஷ் வெறும் மூன்று பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதியை ஒரே வருடத்தில் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் சேதுபதியின் சம்பளமும் சரி படவாய்ப்புகளும் சரி அசராத அளவிற்கு சரியான அஸ்திவாரத்தில் உள்ளது. போகிற போக்கை பார்த்தால் இனி விஜய் சேதுபதி ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

vijay-sethupathi
vijay-sethupathi

Leave a Comment