இயக்குனர் மிஷ்கினுக்காக சூட்டிங்கை கேன்சல் செய்த விஜய்சேதுபதி..! பல கோடி இழந்த தயாரிப்பாளர்..

விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார் காரணம் இவர் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி வில்லன் ரோல்களிலும் சூப்பராக நடிக்கிறார் இதனால் அவருக்கு நல்ல வாய்ப்புகள் குவிக்கின்றன மேலும் இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன.

கடைசியாக கூட லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் வில்லன் சந்தானம் கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினர் அதனைத் தொடர்ந்து தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது குறிப்பாக பாலிவுட்டில் பட வாய்ப்புகளை தட்டி வருகிறார்.

அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்  உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் கத்ரீனா கைப்புடன் கைகோர்த்து மேரி கிறிஸ்மஸ் என்ற படத்திலும் நடிப்பு வருகிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் ஷூட்டிங்கற்காக  தற்போது விஜய் சேதுபதி மும்பையில் தங்கி இருக்கிறார்.

இவர் மும்பையில் ஒரு பிரம்மாண்ட அப்பார்ட்மெண்டில் இங்கு வருகிறாராம் ஒரு நாளைக்கு மட்டுமே விஜய் சேதுபதிக்கு முப்பதாயிரம் கிட்டத்தட்ட செலவாகிறதாம். வாரம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னை வந்து போகிறார் விஜய் சேதுபதி இந்த நிலையில் மிஷிகினின் 50 வது பிறந்தநாள் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

மிஷ்கின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள விஜய் சேதுபதி மேரி கிறிஸ்மஸ்  படக்குழு அனுமதி கேட்டுள்ளார் முதலில் படக்குழு அனுமதி தரவில்லை பின் அனுமதி தந்தனர்.  இதனால் அந்த படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட இரண்டு நாள் பாதிக்கப்பட்டதாம் இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment