விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தின் சீன் இந்தப் படத்தின் அப்பட்டமான காப்பியா வீடியோவை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி, இவரை மக்கள் அனைவரும் மக்கள் செல்வம் என்று தான் அழைப்பார்கள், விஜய் சேதுபதியின் நடிப்பிற்கும் இயல்பான பேச்சுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது, அதேபோல் இவருடைய நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் ஹிட்டானது.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், எதார்த்தமான பேச்சாலும், சினிமா உலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் 2016ஆம் ஆண்டு நலன் குமாரசாமி எழுதி இயக்கிய திரைப்படம் தான் காதலும் கடந்து போகும். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மடோனா செபாஸ்டின், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தார்கள்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

https://youtu.be/BmjfmqkE_9o

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, இந்த வீடியோ கொரியன் திரைப்படத்திலிருந்து சூடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சி அப்படியே கொரியன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் உள்ளது, இந்த திரைப்படம் மைடியர் டெசு பராடோ என்னும் கொரியன் மொழி படத்தை தழுவி இருப்பது தெரியவந்துள்ளது, இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

https://twitter.com/vaangasirikalam/status/1237977564917854210

Leave a Comment