விஜய் சேதுபதியின் அடுத்த பட இயக்குனர் ‘லியோ’ படத்தின் பிரபலமா.! வெளிவந்த சூப்பர் அப்டேட்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது விஜய் சேதுபதி வெற்றிமாறனின் விடுதலை, ஷாருக்கானின் ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இதனை அடுத்து தற்பொழுது விஜய் சேதுபதியின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் தான் இயக்குனர் மிஷ்கின்.

இவர் தான் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தினை இயக்கப் போகிறார் எனவே இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. தற்பொழுது மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனை அடுத்து லியோ படத்திலும் மிஷ்கின் நடித்து வரும் நிலையில் இவரின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் அடுத்த பாடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தினை தமிழ் திரை உலகின் முன்னணி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

தற்பொழுது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நிலையில் இவருடைய அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment