மாஸ்டர் படத்தில் பாத்தது எல்லாம் கம்மி – பல மடங்கு வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்ட புதிய இயக்குனருடன் கைகோர்த்த விஜய் சேதுபதி – ஹீரோ யார் தெரியுமா.?

சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் ஒவ்வொருவரும் ஒரு கனவோடு உள்ளே நுழைகின்றனர். சொல்லப்போனால் ஒரு பிரபலம் நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரையிலும் நடிப்பது வழக்கம் ஒரு சிலரோ காமெடியனாக செயல்படுவார்கள்.

ஆனால் நடிகர் விஜய் சேதுபதி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் உனக்கு அடியாளாக படத்தில் நடித்தார் பின் ஒரு கட்டத்தில் தனது திறமையின் மூலம் ஹீரோ வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தமிழ் சினிமாவில் பெற்றார். இதை அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது ஏன் மாஸ்டர் திரைப்படத்தில் கூட விஜய்-க்கு வில்லனாக பாவனி மிரட்டினார்.

அதனை தொடர்ந்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது சொல்லப்போனால் விஜய்சேதுபதி கையில் தற்போது 15 திரைப்படங்கள் இருக்கின்றன அதில் ஒவ்வொன்றிலும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி என்ற நிலையில் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர் ராஜூமுருகன்.

இவர் இதுவரை ஜோக்கர், குக்கூ, போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ராஜூமுருகன் ஹச். வினோத்தின் குருநாதர். ராஜூமுருகன் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ரெடியாக இருக்கிறார் இந்த படத்தில் வில்லனாக விஜய்சேதுபதியை தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் கதையை விஜய்சேதுபதியுடன் கூறியபொழுது எதிர்மறையான கதாபாத்திரம் என்று கூறி தான் கதையை சொல்லி உள்ளார் சிறப்பாக இருந்த காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சம்பளம் கூட பேசி விட்டாராம். விஜய்சேதுபதி கையில் இப்பொழுது 15 படங்கள் தொடர்ந்து இருப்பதால் கால்ஷீட் மட்டும் கொடுக்க கொஞ்சம் லேட்டாகும்  ன சொல்லி உள்ளார்.

இதனால் படக்குழு பொறுமை காத்து வருகிறது. கார்த்தி படத்தில் வில்லனாக நடிக்கப் போகும் விஜய்சேதுபதிக்கு பவானியை விட இந்த படத்தில் ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி இந்த படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பதை மிக விரைவிலேயே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.

Leave a Comment