ஒரு உரையில் ஒரு கத்தி தான் இருக்கனும்.? விஜய் சேதுபதியை வீழ்த்தி பெஸ்ட் வில்லன் இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற ரெடியாகும் பிரபல நடிகர்.?

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் மற்றும்  குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது தொட முடியாத உச்சத்தில் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோடு இவரது கதாபாத்திரம் வேற லெவலில் இருந்ததால் இவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தமிழை தாண்டி தற்போது பலதரப்பட்ட மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதால் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இருப்பினும் விஜய் சேதுபதி நடித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி படங்களில் கமிட் செய்ய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக்கொண்டு  கியூவில் நிற்கின்றனர்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் விஜய் சேதுபதி மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க அவருக்கு போட்டியாக இதுவரை யாரும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் அவருக்கு எதிராக களமிறங்க தற்பொழுது அரவிந்த்சாமியும் ரெடியாக இருக்கிறார்.

அரவிந்த்சாமி இதுவரை வில்லனாக நடித்த போகன், தனி ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வேற லெவல் ஹிட்டடித்தது. இவரது நடிப்பு அசாதாரணமாக இருந்தது. இதை தொடர்ந்து தற்போது ஹீரோவாக நடித்து வந்த அரவிந்த்சாமி மீண்டும் வில்லனாக களம் இறங்கி விஜய் சேதுபதிக்கு ஆப்பு வைக்க ரெடியாக இருக்கிறார்.

அந்த வகையில் ராம் சரண் நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு வில்லனாக அரவிந்த்சாமி களமிறங்க ஒரு ரவுண்டு வர ரெடியாக இருக்கிறாராம்.யார் பெஸ்ட் என தற்பொழுது ரசிகர்களும் பார்க்க காத்துக் கிடக்கின்றனர்.

Leave a Comment