விஜய் சேதுபதி தனது கடின உழைப்பினால் சினிமா உலகில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று படம் ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்தது.
அதில் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன அதிலும் எந்த விதமான கதாபாத்திரம் இருந்தாலும் அதை தயங்காமல் தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது.
ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் போன்றவற்றில் அசாதாரணமாக நடித்ததால் இவருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துப்போன நடிகராக தற்போது இருந்து வருகிறார்.
மாஸ்டர் திரைப்படத்தில் இவரது பவானி கேரக்டர் யாரும் எதிர்பாராத அளவுக்கு சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து. இதை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இச்செய்தியை விஜய்சேதுபதி எப்படியும் அறிந்திருப்பார் ஆனால் அதைப் பற்றியே அவர் பெரிதாக கண்டு கொள்ளாமல் உண்மை என்பது போல பேசாமலே இருந்து வருகிறார் அப்படி பார்த்தால் அவர் அதிகம் சம்பளம் வாங்குவது உண்மையான செய்தியாகவே இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.
மேலும் இவர் சினிமாவையும் தாண்டி வெப்சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி பக்கங்களிலும் தலை காட்டி வருவதால் தற்போது இவருக்கு பணத்தாசை வந்து விட்டதாக கோலிவுட் பக்கம் பேசப்படுகிறது.
இதற்கு சமிபத்தில் விளக்கமளித்த விஜய்சேதுபதி பணத்தாசை எல்லாம் ஒன்றுமில்லை மக்களையும் மகிழ்விப்பது தான் எனது மிகப்பெரிய ஆசை அதற்காக தான் சினிமாவில் நடிக்கிறேன் என குறிப்பிட்டார்.
அப்புறம் என்னத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கணும் சார் மக்களை இலவசமாகவே நீங்களும் சந்தோஷ படுத்தலாமே என தற்போது கேள்விகள் மூலம் கேட்டு துளைத்து எடுக்கின்றனர். விரைவில் இதற்கும் விஜய் சேதுபதியின் பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.