“சால்ட் அன்ட் பெப்பர்” லுக்கில் அஜித்தை போல் செம்ம கிளாஸாக இருக்கும் விஜய்சேதுபதி.! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி அந்த வகையில் பல்வேறு திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

இருப்பினும் அதை விட படத்தில் எந்த ரோலாக இருந்தாலும் சரி ஒரு வெயிட்டான கதாபாத்திரங்களில் எதில் வேண்டுமானாலும் நடிக்க தயங்க மாட்டார் விஜய் சேதுபதி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று அந்த வகையில் பல்வேறு படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து சினிமா உலகில் ஒரு முத்திரை பதித்தார்.

அந்தவகையில் செக்கச் சிவந்த வானம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருந்தார். அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்தவர்.

அந்த அளவிற்கு அந்த பவானி கேரக்டரில் நடித்து அசத்தினார் இந்த வெற்றியின் மூலம் தற்போது சம்பளத்தை பல மடங்கு உயர்ந்து கொண்டது தெலுங்கு, கன்னடம் போன்ற பக்கமும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

மாஸ்டர் திரைப்படத்தை முடித்த கையோடு தெலுங்கிலோ உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்தப் படம் நேரடியாக டிவியில் வெளியாகியிருந்தாலும் இவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது சமீபத்தில் கூட இந்த படத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதி நடிப்பு மிரட்டலாக இருக்கிறது என தெரிவித்தார்.

இப்படி நடிப்பில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு சினிமா உலகில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இந்த நிலையில் அவர் அஜித்தை போன்று “சால்ட் அன்ட் பெப்பர்” லுக்கில் புதிதாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளப் பக்கத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment