மாநகரம் ரீமேக் படத்தில் மிரட்டலான தோற்றத்தில் விஜய்சேதுபதி.! இணையதளத்தை செதரவிடும் புகைப்படம்

தமிழ் சினிமாவுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெற்றி பெற்ற திரைப்படம் மாநகரம் இந்த திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்களாம் இந்த திரைப்படத்தை மும்பைகார் என பெயரிட்டு இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் பிரபல முக்கிய நடிகர் நடித்து வருகிறார் யார் அந்த முக்கிய நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை விஜய் சேதுபதிதான் ஆம் இவர் இப்பொழுது பாலிவுட்டில் அறிமுகமாகிறார் தமிழில் முனீஸ் காந்த் நடித்த கதாபாத்திரத்தில் தற்போது விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடித்து வருகிறாராம்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மும்பைகார் படத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதியின் தோற்றம் மற்றும் கையில் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் விஜய் சேதுபதி இந்தியில் கிஷோர் பாண்டுரங்கா இயக்கும் காந்தி டாஸ்க் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் மேரி கிறிஸ்துமஸ் போன்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறாராம்.

இதோ அந்த புகைப்படம்.

vijay sethupathi
vijay sethupathi

Leave a Comment