வடசென்னை 2 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி.? இணையத்தில் வைரலாகும் தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தேர்ந்தெடுபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் விடுதலை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் அப்போது வடசென்னை 2 திரைப்படம் குறித்த சில தகவல்களையும் கூறியிருக்கிறார்.

அதாவது வடசென்னை திரைப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி அவர்கள் தான் நடிக்க இருந்தார் என்று கூறி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடிக்காமல் போனது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த சிலர் இரண்டாவது பாகத்தில் நடிக்கலாமே என்று கூறவே விஜய் சேதுபதி இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் வெற்றி மாறன் அவர்கள் தற்போது வடசென்னை படத்தின் இரண்டாவது பாகத்தின் கதையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார் விரைவில் கதை எழுதிய உடன் படம் தொடங்குவார் என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் இரண்டாவது பாகத்தில் நான் நடிக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. விரைவில் வெற்றிமாறன் அவர்கள் வடசென்னை 2 திரைப்படம் குறித்து அப்டேட்டை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய சேதுபதி கூறியது உண்மையான தகவலா என்று தெரியவில்லை ஏனென்றால் அதே இடத்தில் சோசியல் மீடியாக்களில் ஏகப்பட்ட வதந்திகள் பரவுகிறது எதோ என்னால் முடிந்த ஒரு தகவுளை பரப்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment