நானும் சரக்கும் தன்னியுமாகதான் இருந்தேன்.? மாணவர்களுக்கு அறிவுரை கூறிய விஜய்சேதுபதி

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் பிரபலங்களில் ஒருவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டது அந்த அளவிற்கு இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் இவர் தற்பொழுது சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தது மக்களை மிகவும் கவர்ந்து விட்டது அதனை தொடர்ந்து பார்த்தால் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அதேபோல் சமீபத்தில் இவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது மாணவர்கள் முன்னிலையில் பேசிய அவர் குடிப்பழக்கத்தை பற்றியும் பேசி உள்ளார் நான் +2வில் அதிக மார்க் வாங்கவில்லை அதனால் லயோலா கல்லூரி உட்பட மொத்தம் மூன்று கல்லூரிகளுக்கு நான் அப்ளிகேஷன் வாங்கினேன் அன்று இரவே என் அப்பா வீட்டில் குடித்துக் கொண்டு இருந்தார் என்று கூறியதும் அங்குள்ள மாணவர்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளார்களாம்.

vijay sethupathi
vijay sethupathi

சரக்கு அடிப்பதற்கெல்லாம் கை தட்டாதீங்க அது ரொம்ப கெட்ட பழக்கம் என்று கூறினாராம் அதுவும் குறிப்பாக இவ்ளோ பேசுற  நான் எனக்கும் குடி பழக்கம் இருக்கு என்று கூறியுள்ளார் மேலும் நல்ல நல்ல கருத்துக்களை மாணவர்களுக்கு விஜய் சேதுபதி கூறி உள்ளதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment