இயக்குனர் விக்னேஷ் சிவன் அண்மையில் நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த படம் வழக்கம்போல காதல், காமெடி கலந்த படமாக விக்னேஷ் உருவாகியிருந்தார்.
படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது இந்த படம் மக்களுக்கு ரொம்ப பிடித்துப் போனதால் நாளுக்கு நாள் திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது அதன் காரணமாகவே காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வசூல் வேட்டையும் சூப்பராக நடத்தி வருகிறது.
இதுவரை உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றன இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய் சேதுபதியும் விக்னேஷும் இணைந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்து உள்ளன. இதுவரை 2 முறை இணைந்துள்ளனர் மூன்றாவதாக ஒரு முறையும் இணைய உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் நானும் ரௌடி தான் படம் உருவானது அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படம் குறித்து அண்மையில் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் குறித்து பேசியுள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.

நானும் ரௌடி தான் படத்தின் கதையை முதல் முறையாக விக்னேஷ் சிவன் கூறும்போது விஜய் சேதுபதி துவங்கிவிட்டாராம். அந்த அளவிற்கு அந்த கதையில் ஒன்றுமே இல்லையாம் ஏன் கிளைமாக்ஸ் கூட முடிக்கப்படாமல் இருந்ததாம் அதன்பிறகு கதையில் மாற்றங்கள் செய்து நானும் ரவுடிதான் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாம். இதனை விஜய் சேதுபதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

