அட நம்ம விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய மகளா.! ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்த விட்டாரே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலங்களாக ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.

விஜய்சேதுபதி நடிகராக மட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பலரது மனதை கொள்ளை கொண்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் உச்சத்திற்கு சென்று விட்டார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழையும் தாண்டி இந்தி, தெலுங்கு என பல மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்தவகையில் பல திரைப்படங்கள் கையில் உள்ள விஜய் சேதுபதி தற்போது பாண்டிச்சேரியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

 இந்த படப்பிடிப்பின்போது சமந்தாவிற்கு விருது கிடைத்ததற்காக படக் குழுவில் உள்ள அனைவரும் இவருடன் கேக் வெட்டிய புகைப்படம் சமீபத்தில்தான் வெளியானது.

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம விஜய்சேதுபதியின் மகளா இது ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே என கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

vijay sethubathi
vijay sethubathi

Leave a Comment