தொடர்ந்து தயாரிப்பாளர்களை மண்ணை கவ்வ வைக்கும் விஜய்சேதுபதி..! கொஞ்சமாவது சிவகார்த்திகேயன் கிட்ட கத்துக்கோங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் தமிழ் ஹிந்தி மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிப்பது மட்டும் இல்லாமல் எப்போதும் பிஸியாக இருந்து வருகிறார் பொதுவாக திரையில் முன்னணி நடிகராக வலம் வரும் எந்த ஒரு நடிகரும் துணை கதாபாத்திரத்தில் நடிப்பது கிடையாது ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது.

எப்படிப்பட்ட கதாபாத்திரம் மற்றும் வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றில் மிக திறமையாக நடித்து தன்னை தனித்துவமாக காட்டுவதில் வல்லவர் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் தற்போது பயங்கரமான வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக பார்க்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள்.

இந்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் பொதுவாக விஜய் சேதுபதி பலர் இயக்குனர்களுடனும் அறிஞர்களுடன் திரைப்படங்கள் நடித்து வந்தாலும் வசூல் ரீதியாக இவர் வெற்றியை பெற தவறி கொண்டே இருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் இவர் நடித்த காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கும் என நினைத்த நிலையில் 32 நாட்கள் முடிவில் வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்தது இதனால் ரவுடி பிக்சர் நிறுவனம் மற்றும் சன்ஸ்கிரீன் ஸ்டூடியோ ஆகிய இரண்டும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

பொதுவாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே கல்லா கட்ட தவறி வருகிறது இதனால் நீங்கள் கதையில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் பலரும் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

Leave a Comment