முதன்முதலாக அஜித்துடன் மோதும் விஜய் சேதுபதி..! Ak 61 பற்றி லீக்கான லேட்டஸ்ட் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி திரைப்பட இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வினோத் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தல அஜித்தை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தல அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை வறுமை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் தான் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் தல அஜித் மீண்டும் வினோத் திரைப்படத்தில் நடித்து வருவது பலருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வினோத் சொந்தமாக எழுதிய கதை ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் அஜித் இப்படித்தான் இருப்பார் என்ற ஒரு கெட்டப் வெளியாகி ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது மட்டுமில்லாமல் தல அஜித்தை எப்படி ஒரு கெட்டப்பில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கோலிவுட் வட்டாரமே அதிரும் அளவிற்கு ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே மாபெரும் வரவேற்பை பெற்றுகொடுத்து வருகிறது.

அந்த வகையில் தளபதியுடன் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்டை மற்றும் கமலுடன் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் நடித்துள்ளார் இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது மட்டுமில்லாமல் தற்போது அஜீத் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

vijay sethupathi-1
vijay sethupathi-1

இவ்வாறு விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடித்தால் கண்டிப்பாக படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Leave a Comment