பொதுவாக இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகள் டாப் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்கள் அந்த வகையில் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உச்சத்தை தொட்ட நடிகைகளில் பலர் இருக்கிறார்கள் அப்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் கிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் கீர்த்தி செட்டி .
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்த உப்பனா என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார் கீர்த்தி. இதனை தொடர்ந்து சியாம் சிங்காராய் பங்காராராஜி,தி வாரியார், கஸ்டடி, மனமே உள்ளிட்டா பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்,
தற்பொழுது கீர்த்தி செட்டி , வா வாத்தியார் , LIK , ஜீனி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் வா வாத்தியார் 12ஆம் தேதியும் LIK திரைப்படம் 18ஆம் தேதியும் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதேபோல் இவர் நடித்துள்ள ஜீனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.