“ஜவான்” படத்தில் நடிப்பதற்கு பல கோடி சம்பளம் கேட்ட விஜய் சேதுபதி..! கேட்டதை கொடுக்க ஒத்துக் கொண்ட படக்குழு.! எவ்வளவு தெரியுமா..

0
jawan-
jawan-

நடிகர் விஜய் சேதுபதி தமிழில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும், நானும் ரவுடிதான், சேதுபதி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் மிக விரைவிலேயே டாப் நடிகர்களுக்கு நிகராக இவரும் வளர்ந்துள்ளார்.  இருந்தாலும் சமீப காலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் வில்லனாகவும் ஒரு பக்கம் மிரட்டி வருகிறார்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில்  விஜய்க்கு வில்லனாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலும் கமலுக்கு நிகரான வில்லனாக பின்னி பெடல் எடுத்திருந்தார்.

இந்த இரண்டு படங்களின் வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக வரும் படங்களை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தான் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை புக் செய்ய போட்டி போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பலமொழிப் பக்கமும் அவருக்கு வாய்ப்பு குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இதனை அறிந்து கொண்ட விஜய் சேதுபதியும் தனது சம்பளத்தை தடலடியாக உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை கமிட் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. ரெட் சில்லி தயாரிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியாகயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேசிய பட குழு உங்களுக்கு 25 கோடி சம்பளம் தருகிறோம் என கேட்டுள்ளனர் அதற்கு விஜய் சேதுபதியோ கொஞ்சம் கூட யோசிக்காமல் கூலாக 30 கோடி கொடுங்கள் நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார். படக்குழுவும் மறுப்பு தெரிவிக்காமல் இந்த சம்பளத்தை ஒப்புக்கொண்டுள்ளதாம்.