சரமாரியாக சண்டை போடும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி.! வெளியானது புதிய ப்ரோமோ வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆண்ட்ரியா கௌரி கிஷன் மகேந்திரன் சஞ்சீவ், என பல முக்கிய பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

படத்தை வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.  அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள்.

கடந்த 5 நாட்களாக மாஸ்டர் படத்திலிருந்து ப்ரோமோ வீடியோ வெளியாகி வருகிறது அந்த வகையில் தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, அந்தப் ப்ரோமோ வீடியோவில் பொளந்து கட்டும் பரபர பாடலுடன் விஜய் மற்றும் விஜய்சேதுபதி அடித்துக்கொள்ளும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இந்த புரோமோ விடியோ ஆறாவது ப்ரோமோ வீடியோவாக வெளியாகி உள்ளது.

இதோ அந்த புரோமோ விடியோ.

Leave a Comment