நடிகர் பரத் நடித்துள்ள ‘மிரள்’ பட டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகர் பரத். இவருடைய நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் பெரிதாக எந்த திரைப்படங்களும் வெளிவராமல் இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் நடித்துள்ள திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதாவது நடிகர் பரத் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் மிரள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் வாணி போஜன் கே எஸ் ரவிக்குமார் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரசாந்த் எஸ் என் இசையமைத்துள்ளார்.

மேலும் ஸ்லாஷர் திரில்லார உருவாகியுள்ள மிரள் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாவது லோக் அண்மையில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது இவ்வாறு இந்த டீசரை பிரபலம் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள் தற்பொழுது அந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version