மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் விஜய் சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்.! அதுவும் முன்னணி நடிகர் படத்தில்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்தார் அதன்பிறகு வில்லனாகவும் நடித்து வருகிறார், பேட்ட திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார், அதே சமயத்தில் தமிழில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள 20-வது திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். படத்தை சுகுமார் என்ற இயக்குனர் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய்சேதுபதியிடம்  10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு கோடிகளில் சம்பளம் அள்ளித் தருகிறார்கள், இது அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

Leave a Comment

Exit mobile version