10 கோடி கொடுத்தால் அந்த முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்கிறேன் கட்டளையிட்ட விஜய்சேதுபதி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

படத்திற்கு விக்ரம் என டைட்டில் வைத்துள்ளார்கள் படக்குழு.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தின் டைட்டிலுக்கு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது அந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரல் ஆனது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கொரோனா காரணமாக காலதாமதம் ஆகிறது. இந்த நிலையில் கமலுக்கு வில்லனாக முதலில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் அதன்பிறகு கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் தான் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியானது அதற்கு ராகவா லாரன்ஸ் மறுப்பு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்  மீண்டும் விஜய்சேதுபதியுடன் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஆனால் விஜய் சேதுபதி இந்த வருடத்தில் ஒரு டஜன் திரைப்படத்திற்கு மேல் கமிட் ஆகியுள்ளதால் கண்டிஷன் போட்டுள்ளாராம் அதாவது மற்ற திரைப்படங்களில் நடிக்கும் பொழுது கால்சீட் கேட்க கூடாது எனவும். அதேபோல் மற்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கால்ஷீட் கொடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கு சம்பளமாக 10 கோடி ரூபாய் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் கமிட் ஆவாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் விஜய்சேதுபதி இன்னும் இரண்டு வருடங்களுக்கு யாருக்குமே கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு  படங்களில் கமிட் ஆகியுள்ளார் அதனால் இனி அவர் படங்களில் நடிப்பதற்கு மட்டுமே நேரம் கிடைக்கும்.

அப்படி இருக்கையில் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment