அட நம்ம விஜய் சேதுபதி இந்த சீரியலில் நடித்துள்ளாரா.! எந்த சீரியல் தெரியுமா வீடியோ இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பணியாற்றினார். இவர் ஹீரோவாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று மூலம் அறிமுகமானார். இந்த படம் பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அவர் திரை உலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பீட்சா, சேதுபதி நானும் ரவுடி தான், தர்மதுரை ரெக்க ஆண்டவன் கட்டளை புரியாத புதிர் கருப்பன் காதலும் கடந்து போகும் போன்ற படங்களாகும்.

இப்பொழுது அவர் தமிழ்த் திரை உலகில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வந்துள்ளார் விஜய்சேதுபதியை இதற்கு முழு காரணம் அவரது உழைப்பு மட்டுமே ஆரம்பகாலத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று திரை உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு முன்னணி நடிகராக மாறி உள்ளார்.

திரைக்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் சில சீரியல்களிலும் மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்து உள்ளார். எந்த சீரியல் தெரியுமா சன் தொலைக்காட்சியில் 2006ம் ஆண்டு ஒளிபரப்பான ”பெண்” என்ற சீரியலில் விஜய் சேதுபதி அவர்கள் பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அவரது தற்பொழுது ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

தற்போது விஜய்சேதுபதி அவர்கள் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் ஹிந்தி தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் நடிக்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன

Leave a Comment