அஜித்தை தொடர்ந்து சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் அசத்தும் தளபதி விஜய்.. வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் இரவு, பகல் பார்க்காமல் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங் கடும் குளிர் என்று கூட பார்க்காமல் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது லியோ படத்தில் விஜய் உடன் கைகோர்த்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பலர் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

இதுவரை மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களின் காட்சிகள் மட்டும் நிறைவடைந்துள்ளதாம்.. மற்றபடி அனைத்து நடிகர், நடிகைகளும் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர் இப்படி இருகின்ற நிலையில் பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத் அண்மையில் லியோ படத்தின் ஷூட்டிங்  கலந்து கொண்டார் இவரை இயக்குனர் லோகேஷ், விஜய் போன்றவர்கள் வரவேற்றனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் சால்ட் அண்ட் பேப்பரில் இருந்து உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தை தொடர்ந்து சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் செம்ம மாஸாக இருக்கிறீர்கள்..

நிச்சயம் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் எனக் கூறி புகைப்படத்திற்கு கமெண்ட்களை அள்ளி வீசுவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் கொடுத்து வருகின்றனர் இதோ தளபதி விஜய் லியோ படபிடிப்பு தளத்தில் சால்ட் அண்ட் பேப்பர் லக்கில் இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

vijay
vijay
vijay
vijay
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment