நேத்து இடியில முளைச்ச காளான்- நீயெல்லாம் எனக்கு போட்டியா..? கெத்துக்காட்டும் ரஜினி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர் இருக்கும் இடத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிதில் முறியடித்து விட்டார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தன்னுடைய 169 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் ஓரளவு வெற்றியை மட்டுமே கொடுத்தது இந்நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ரஜினி எப்படி ஒரு தோல்வியை சந்தித்து வந்தாரோ அதே போல நெல்சன் அவர்களும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் தோல்வியை சந்தித்துள்ளார் இதனால் தான் இயக்கப்போகும் என்ற திரைப் படத்தின் கதையில் அதிக அளவு கவனம் செலுத்தி வருவது மட்டுமில்லாமல் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்று அயராது போராடி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை பிரபல சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது மேலும் இந்த திரைப்படம் சுமார் 220 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம்.

பொதுவாக ரஜினிகாந்தின் சம்பளம் 100 கோடியாக மட்டுமே இருந்தது அதே போல அஜித் சம்பளம் அதன் பிறகு 100 கோடியாக இருந்தது இப்பொழுது முன்னிலையில் 120 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான் ஆனால் இந்த 169 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இவர்கள் அனைவரையும் முறியடிக்கும் வகையில் 151 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வருகிறார்.

இவ்வாறு வெளி வந்த தகவலின் படி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் நடிக்க உள்ளார்கள்.

Leave a Comment