ஆத்தாடி விஜய்க்கு இத்தனை கோடி சம்பளமா..? சம்பள விஷயத்தை கேட்டு துண்ட காணும் துணிய காணும் என ஓடிய தயாரிப்பாளர்..!

thalapathy 69
thalapathy 69

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியுள்ளன அதிலும் சமீபகாலமாக வசூலில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது விஜயின் திரைப்படங்கள் அந்த வகையில் கடைசியாக வெளியாகிய லியோ திரைப்படமும் ஓரளவு வசூல் வேட்டை நடத்தியது.

தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் பிரசாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் நடிப்பதை காட்டிலும் விஜய்க்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது இந்த நிலையில் சினிமாவில் இருந்து விஜய் விரைவில் விலக இருக்கிறார்.

கடைசியாக தளபதி 69 திரைப்படம் தான் விஜயின் கடைசி படம் எனக் கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை வினோத் தான் இயக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது ஆனால் கிட்டத்தட்ட உறுதியாக தவகாவல் என்றாலும் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை அதேபோல் தயாரிப்பாளர் யார் என்று விவரம் இன்னும் தெரிய வரவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளரான Dvv entertainment  நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது ஒரு கட்டத்தில் அனைத்தும் தயாராக இருந்த நிலையில் பட அறிவிப்புக்கு முன்பே படத்தின் பிசினஸை தயாரிப்பாளர் துவங்கி விட்டதால் விஜய் கோபப்பட்டு இந்த தயாரிப்பு நிறுவனம் வேண்டாம் என முடிவு செய்ததாக கூறப்பட்டது ஆனால் தற்பொழுது வெளியாகியுள்ள தகவல் படி தளபதி 69 திரைப்படத்தில் இருந்து DVV நிறுவனம் விலகி விட்டதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

அதற்குக் காரணம் விஜயின் சம்பளம் தான் எனவும் அவர் கூறியுள்ளார் கோட் திரைப்படத்திற்காக விஜய் 200 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் எனவும் திரை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியான நிலையில் இதனை தொடர்ந்து தான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்காக அதாவது தளபதி 69 திரைப்படத்திற்காக  DVV நிறுவனத்திடமிருந்து 250 கோடி சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது.

சம்பள விஷயம் குறித்து விஜய் இடம் பேசி விடலாம் என தயாரிப்பு நிறுவனமும் அணுகி உள்ளார்கள் ஆனால் சம்பள விஷயத்தில் விஜய் இறங்கி வருவது போல் தெரியவில்லை அதனால் இந்த திரைப்படத்தில் இருந்து Dvv நிறுவனம் வெளியேறி விட்டதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.