அட கிளைமாக்ஸ் சரி இல்லையே என விலகிக் கொண்ட விஜய்.! மற்றொரு ஹீரோ நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் என்ன தெரியுமா.?

0
vijay
vijay

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவர் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். இவரின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும். மேளதாளம், வெடிகள், பேனர்கள் என அமர்க்களப் படுத்துவார்கள் ரசிகர்கள்.

அதேபோல் தளபதி விஜயின் கால்ஷீட் கிடைக்க இன்று ஒவ்வொரு இயக்குனரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு காலகட்டத்தில் விஜய் சில தோல்வி படங்களை கொடுத்ததால் விஜயை வைத்து படம் எடுப்பதற்கு பலரும் யோசித்தார்கள், அப்பொழுது விஜயை வைத்து மெகா ஹிட் கொடுத்து அவருடைய திரைப் பயணத்தை மாற்றியவர்களில்  விக்ரமன் ஒருவர்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த உன்னை நினைத்து திரைப்படம் மெகா ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார் என்பது பலருக்கு தெரியாத விஷயம். விஜய் நடித்த பொழுது புகைப்படங்களும் வெளியானது அனைவரும் அறிந்ததே.

vijay
vijay

இப்படி உன்னை நினைத்து திரைப்படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் போதே இயக்குனரிடம் சார் இந்த படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை மன்னித்துவிடுங்கள் ஏதோ எனக்கு உடன்பாடு இல்லை என கூறி விலகிக் கொண்டார். அதன் பிறகுதான் இந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றதாம்.

vijay
vijay

இந்த விஷயத்தை விக்கிரமனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay
vijay