முருகதாஸிற்கு வாய்ப்பு தர மறுத்த விஜய்.! தரமான நடிகரை தட்டி தூக்கிய முருகதாஸ்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அந்த வகையில் முதன்முதலாக முருகதாஸ் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தது அஜித் தான். 2001 ஆம் ஆண்டு தீனா என்ற திரைப்படத்தின் மூலம் தான் முருகதாஸ் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி ,கத்தி, சர்க்கார், தர்பார் என பல திரைப்படங்களை இயக்கினார்.

முருகதாஸ் விஜய் அவர்களுடன் இணைந்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று திரைப்படங்களை இணைந்து இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். எந்த நிலையில் முருகதாஸ் தளபதி விஜயின் 65 ஆவது திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார் ஆனால் விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளார்.  அந்த வாய்ப்பை இளம் இயக்குனர் நெல்சனுக்கு கொடுத்தார்.

அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களுக்கு கதை கூறியுள்ளார் ஆனால் அனைவருமே வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் ஒரு சில முன்னணி நடிகர்கள் அவரைக் கண்டு கொள்ளவே இல்லையாம் இதனால் பல வருடங்களாக பொறுமையாக இருந்து வந்தார் ஏ ஆர் முருகதாஸ்.

தன்னை நிராகரித்த முன்னணி நடிகர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு சூப்பரான கதை ஒன்றை தயார் செய்துள்ளாராம் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது அதேபோல் இந்த திரைப்படத்தில் முதன்முறையாக சிம்பு அவர்கள் இணை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் கொடுத்துள்ள ஏ ஆர் முருகதாஸ் தற்பொழுது சிம்பு வைத்து நிச்சயமாக ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படம் சிம்புவின் மிகப்பெரிய திரைப்படமாக அமையும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version