கேட்காமலேயே 5 லட்சம் பணம் கொடுத்த விஜய் – மெய்சிலிர்த்து போன சினிமா பிரபலம்.!

0
vijay
vijay

தமிழ் சினிமாவுலகில் நடன இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்து பின் நாட்கள் போகப்போக நடிகராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது படங்கள் ஆரம்பத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தாலும் போகப்போக படங்கள் தோல்வியை தழுவ வேறுவழியின்றி இவரே படத்தின் கதையை எழுதி இவரே நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி இவர் நடித்த முனி முனி படம் சூப்பர் ஹிட் அடிக்க அதை அப்படியே காஞ்சனா சீரியஸாக மாற்றினார். அந்த படங்கள் தொடர்ந்து வெற்றி  வசித்து வருகின்றன அதனை தொடர்ந்து தற்போது பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு நடித்து வருகிறார் அந்த வகையில் ருத்ரன், அதிகாரம் என அடுத்தடுத்த மிரட்டலான படங்களில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ராகவா லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் நிதி திரட்டியும், தன்னால் முடிந்த காசுகளை கொடுத்து வருகிறார். மேலும் அவர்களுக்கு உதவியும் வருகிறார் மேலும் பல நடிகர், நடிகைகளும் பண உதவி செய்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தடவை இந்த ட்ரஸ்டுக்கு கொஞ்சம் பண உதவி தேவைப்பட்டது அப்பொழுது ராகவா லாரன்ஸ் சிம்புவுக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார் உடனே சிம்புவும் ஒரு லட்ச ரூபாய் பண உதவியை அனுப்பி வைத்துள்ளார் இதை எப்படியோ புரிந்து கொண்ட விஜய் உடனே ராகவா லாரன்ஸுக்கு போன் செய்து ஏன் நண்பா நான் எல்லாம் உதவி செய்ய மாட்டேனா என கேட்டுள்ளார்.

அதற்கு ராகவா லாரன்ஸ் இல்ல நண்பா நீ படங்களில் பிஸியாக இருப்பாய் அதனால் தான் கேட்கவில்லை என கூறினார் உடனே விஜயை எதுவும் பேசாமல் 5 லட்சம் ரூபாயை டரஸ்டுக்கு  பணம் அனுப்பி உள்ளார். விஜய் செய்த செயலைப் பார்த்து ஆனந்தம் அடைந்த ராகவா லாரன்ஸ் கேட்காமலே உதவி செய்யும் மனசு விஜய்க்கு இருக்கு அதை தளபதி ரசிகர்களும் தற்போது புரிந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.