தன்னைப்பற்றிய நீதிமன்ற தீர்ப்பிற்கு தனது பாணியில் நக்கலாக பதிலளித்த விஜய்.! தளபதி எப்பொழுதும் வேற ரகம்தான்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக பேசப்பட்டு வந்தது.

இதற்கிடையில் விக்ரம் படம் அப்டேட்  மற்றும் அஜித்தின் வலிமை திரைப்பட அப்டேட் இதையெல்லாம் ரசிகர்கள் கண்டு கொள்ளாதபடி விஜயின் கார் பஞ்சாயத்து பெரிதாகப்பேசப்பட்டது. விஜய் மீது சொல்லப்பட்ட வழக்கில் வரிஏய்ப்பு எதுவுமில்லை எனவும் வரிவிலக்கு தான் கேட்டதாகவும் ஒரு தெளிவான கருத்து இருக்கிறது இது புரியாமல் விஜய் வரி கட்டவில்லை என ஒரு பக்கம் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு காலி செய்து வந்துள்ளது ஒரு கூட்டம்.

ஆனால் இதையெல்லாம் விஜய் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார் ஏனென்றால் இதை விட பெரிய பஞ்சாயத்து எல்லாத்தையும் பார்த்து விட்டார் விஜய் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இப்படி இருக்க நீதிமன்றம் தீர்ப்பு கொடுப்பதை விட்டு விட்டு விஜய்யை வேண்டுமென்றே தாக்கி பேசினார்கள் அதாவது ரீல் ஹீரோவாக இருக்க கூடாது ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமென நீதிமன்றத்தில் பேசியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதைக் கேட்ட விஜய் தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் தன்னை அவமதிப்பு செய்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் மீது ஒரு வழக்கை போட்டு விடுங்கள் என தன்னுடைய பாணியில் நக்கல் நையாண்டியாக கூரி ஜாலியாக பேசியுள்ளார். நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்துவிட்டு அபராதம் வாங்கி அதோடு விட்டிருக்க வேண்டும் தேவை இல்லாமல் எதை எதையோ பேசி வாங்கி கட்டிக் கொள்கிறார்கள்.

மேலும் இந்த தகவல் சினிமா பிரபலங்களிடம் வைரலானதை அடுத்து விஜய்க்கு பல சினிமா பிரபலங்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.