கதைபடி ஹீரோயின் தான் மாஸ்.. விஜய் வேண்டா வெறுப்பாக நடித்த படம்! வெளிவந்து பெரிய ஹிட்

Vijay
Vijay

Vijay : சினிமா உலகை பொருத்தவரை ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் நடிகர்கள் ஈஸியாக தவிர்த்து விடுவார்கள் ஆனால் சொல்லும் நபர் அவருடைய அப்பாவாக இருந்தால் என்ன செய்வது வேற ஆப்ஷன் கிடையாது தந்தை படத்தில் நடித்தது தான் ஆக வேண்டும் அப்படி விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை தயாரித்து இயக்கிய பல படங்களில் நடித்துள்ளார்.

அப்படி தான் ஒரு தெலுங்கு படத்தின் கதையை  எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்க்கு சொல்லி உள்ளதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தை போடும் காட்டியுள்ளார் படத்தை முழுவதும் பார்த்த தளபதி விஜய் படம் நல்லாத்தான் இருக்கு ஆனா படத்தில் ஹீரோ வில்லன் மாதிரி தெரிகிறார் ஹீரோயின் தான் படத்தை சுமந்து செல்கிறார் என கூறியிருக்கிறார்.

இதில் நான் நடித்தால் நிச்சயம் படம் ஹிட்டாகாது என கூறி இருக்கிறார் ஆனால் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் நீ நடி நிச்சயம் படம் ஹிட் அடிக்கும் எனக் கூறியுள்ளார் இருந்தாலும் விஜய் வேண்டாம் வெறுப்பாக தான் அந்த படத்தில் நடித்திருக்கிறார். படம் வெளிவந்தது விஜய்க்கே இந்த படம் ஹிட் அடிக்காது என்பதால் அதை ஒரு பெரிதாக பொருட்படுத்தவே இல்லையாம்..

Vijay
Vijay

ஆனால் ஏசி சந்திரசேகர் அவர்கள் இந்த படத்திற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என தினமும் கேட்டுக் கொண்டு வந்தாராம் ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் பலரும் இந்த படம் ஓடாது என கூறியிருக்கிறார்கள். ஆனால் விஜய் இந்த படத்தில் சற்று வில்லன் மாதிரி நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு படத்திற்கான வரவேற்பு அதிகரிக்க ஆரம்பித்தது இதனை உணர்ந்து கொண்ட எஸ். ஏ. சந்திரசேகர்..

புரமோஷன் செய்யும் விதமாக படத்தை பார்த்து சென்ற சில தம்பதிகளை அழைத்து விஜய்க்கு மாலை  போடுவதை பிரமோஷன் செய்திருந்தால் அந்த விளம்பரம் பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்தனர் படமும் பெரிய ஹிட் அடித்தது அந்த படம் வேறு எதுவும் அல்ல “பிரியமானவளே படம்” தான் விஜய் சிம்ரன் நடிப்பில் செல்வ பாரதி இயக்கத்தில் இந்த படம் உருவானது பெரிய ஹிட் அடித்தது.