பிரமாண்ட இயக்குனருடன் இணைகிறாரா விஜய்.? அப்போ இந்தியன் 2 என்ன நிலைமை.? விஜய்யை சிபாரிசு செய்யும் இசையமைப்பாளர்

vijay next movie director: இளைய தளபதி விஜய் அவர்களின் 65 வது திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருந்தார். ஆனால் அவர் கூறிய கதை  படிக்காததால் விஜய் நடிக்க மறுத்துவிட்டார்.

மேலும் அதனை தொடர்ந்து அனிருத்தின் சிபாரிசின் பேரில் கோலமாவு கோகிலா,  டாக்டர் போன்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் விஜயை வைத்து அடுத்த படத்தை இயக்க விஜயிடம் கதையை கூறியுள்ளார்.

மேலும் இதற்கிடையே பிரம்மாண்ட இயக்குனரான இயக்குனர் ஷங்கர் அவர்கள் விஜயை வைத்து ஏற்கனவே நண்பன் திரைப்படத்தை இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்தநிலையில் மீண்டும் இயக்குனர் சங்கர் அவர்கள் விஜய்யை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவர் இயக்கும் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதால் விஜய்க்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ விரைவில் விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் யார் என்று என்பது தெரியவர உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment