ஆடம்பர காருக்கு வரி கட்டவில்லையா விஜய்.! வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்

0

தனது விடாமுயற்சியினால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தொடர்ந்து எந்த சர்ச்சையிலும் சிக்காமல் வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வந்தும் சொகுசு காருக்கு வரி கட்டவில்லை என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நிலவரப்படி முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்று அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு விஜய்யை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு விருப்பப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தளபதி விஜயும் தனது சம்பளத்தை உயர்த்தி வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது.இந்திரைப்படத்தினை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திலீப்குமார் இயக்கிவரும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தளபதி விஜய் சினிமாவையும் தாண்டி ஒரு கார் பிரியர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதோடு தொடர்ந்து ஏராளமான கார் வாங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ஒரு சொகுசு காரை இறக்குமதி செய்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் அந்தக் காருக்கு நுழைவு வரி கட்டவில்லை என்று ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் கோர்ட்டிற்கு வழக்கு வந்துள்ளது. அதோடு ஒன்பது வருடங்களாக வரி கட்டாமல் எப்படி அந்த காரை ரிஜிஸ்டர் செய்து ஓட்ட முடியும் என்றும் கூறப்பட்டு வருகிறது. பொதுவாக நுழைவு வரி சட்டம் சமந்த ஒன்று நம்ம இஷ்டத்துக்கு கட்டுவது நன்கொடை இல்லை எனவும் அழுத்தமாக கூறப்பட்டு வருகிறது.

vijay 001
vijay 001

இதன் காரணமாக நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அவதாரத்தை நேரடியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிவுள்ள இவர்  இப்படி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த செய்தி நியூஸ் 7 தொலைக்காட்சியின் மூலம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.