விஜயின் ‘நண்பன்’ திரைப்படத்தை முதலில் இவர்தான் இயக்க வேண்டியது.! ஷங்கர் கிடையாது.. உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர்.!

தளபதி விஜய் நண்பன் திரைப்படத்தை முதன்முதலில் இயக்குமாறு கேட்டுக் கொண்டார் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபனை. இதை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் பார்த்திபன், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருபவர் அடிக்கடி தனது டுவிட்டரில் கருத்துக்களை பதி விடுவார், இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பார்த்திபனிடம் நீங்களும் விஜய்யும் இணைந்தால் செம மாசாக இருக்கும் என கூறியுள்ளார்.

வழக்கமாக பார்த்திபன் தனக்கே உரித்தான ஸ்டைலில் கருத்துக்களை பதிவு விடுவார் அந்த வகையில் தற்போது தன்னுடைய ஸ்டைலில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார், மேலும் பார்த்திபன் அவர்கள் கூறியதாவது மாசுக்கு மாஸ்டரை பிடிக்கும் மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும் என கூறியுள்ளார்.

நண்பன் படத்தை என்னைதான் முதலில் இயக்க சொன்னார் அழகிய தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார் நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என கூறியுள்ளார். மாஸ்டர் திரை படத்தின் ரிலீஸுக்கு முன்பே தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஒருவேளை தளபதி65 திரைப்படத்தை இயக்கப்போவது பார்த்திபனோ என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.

Leave a Comment