என்னதான் நல்ல படம் நடிச்சாலும் விஜய் படம் மட்டும் தேசியவிருதே வாங்காது.!! காரணம் இதுதான்.

தற்போது கோலிவுட்டின் டாப் பேச்சாக இருப்பது தேசிய விருது சர்ச்சை தான். அதாவது இசையமைப்பாளர் இமானுக்கு விசுவாசம் திரைப்படத்திற்காக கிடைத்த சிறந்த இசையமைப்பாளர் விருவதுதான் இந்த அனைத்து சர்ச்சைக்கும் காரணம்.

இசையமைப்பாளர் இமான் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவருக்கு அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திற்காக கிடைத்த இந்த தேசிய விருதை தான் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் விஜயின் திரைப்படங்களுக்கு ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை ஏன் தேசிய விருதுகளுக்கு தகுதி ஆகவில்லை என கேள்வி எழும்பியுள்ளது. அதற்கு ஒரு சிலர் விஜய் தொடர்ந்து அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும்  தனது திரைப்படங்கள் மூலம் விமர்சித்து வருவதால்தான் இப்படி ஒரு சூழ்நிலை நிலவி உள்ளது என கூறுகின்றனர்.

மேலும் விஜய்யின் திரைப்படங்களான கத்தி, சர்க்கார் போன்ற திரைப்படங்கள் அரசியலுக்கு எதிராக  மக்களுக்கு சில நல்ல கருத்துக்களை கூறியதால் அரசியல்வாதிகள் இவரின் திரைப்படத்தை அங்கீகரிக்கவல்லை எனவும் தெரிய வருகிறது.

kaththi
kaththi

அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கு அரசியல் மீதுள்ள ஆசையும் ஒருவகை காரணம் எனவும் கூறுகின்றனர். இதனாலேயே இவரின் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு பல வருடங்களாக விருது கொடுக்கவில்லை என்றும், மேலும் இதுபோன்று தொடர்ந்து அரசாங்கத்தை விஜய் தனது திரைப்படங்கள் மூலம் விமர்சித்து வந்தால் கண்டிப்பாக இதற்குப் பிறகும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்காது எனவும் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

Leave a Comment