விஜய் திரைப்படத்தின் டிரைலர் தான் அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லராக இருக்கும்.! தளபதியை மிரட்டும் பிரபல நடிகை

meera mithun speak about bigil trailer : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதி விஜய் இந்த திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் டிரைலர் வெளியாக இருந்த நிலையில்.

திடீரென படக்குழு டிரைலரை நிறுத்தி வைத்துவிட்டது அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் கடுப்பானார்கள், அதன்பிறகு நிலைமையைப் புரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டிரைலர் எப்போது வெளியானாலும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் கொண்டுவர காத்துக்கண்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் ஒருபுறம் மிகவும் ஆர்வத்துடன் இருக்க ஆனால் பிரபல நடிகை சூப்பர் மாடல் மீரா மிதுன்தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக டிஸ் லைக் பெற்ற  டெய்லராக விஜய் மற்றும் சூர்யா ட்ரைலர் இருக்குமென தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

meera-mithun-tweet

பாலிவுட் சினிமாவில் நெப்போட்டிசம் காரணமாக சமீபத்தில் வெளியாகிய வாரிசு நடிகையான ஆலியா பட் நடித்த sadak 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒரே நாளில் ஆறு மில்லியன் திஸ் லைக் பெற்றது, அதேபோல் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகரான விஜய் மற்றும் சூர்யாவின் திரைபடமும் அதிக டிஸ் லைக் பெரும் என மீரா மிதுன்  தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகளை அவதூறாக பேசிய மீரா மிதுன் மீது கொலை காண்டுல இருக்கிறார்கள் ரசிகர்கள் அதற்குள் டுவிட்டரில் இப்படி ஒரு பதிவை வெளியிட்டது ரசிகர்களிடையே இன்னும் கோபத்தை அதிகரித்துள்ளது.

Leave a Comment