விஜய் தமிழ் சினிமாவில் தனக்கான அந்தஸ்தை பெற்றுள்ளார், ஆனால் இந்த உச்சத்தை தொடர்வதற்கு விஜய் ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்து உள்ளார். தோல்விகளை சந்தித்தாலும் சோர்வடையாமல் வெற்றிக்காக பல முயற்சிகளை எடுத்து வந்தார்.
இப்படி இவர் முயற்சியில் 1997 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் லவ் டுடே, இந்த திரைப்படத்தின் இயக்குனர் பாலசேகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், லவ்டுடே இரண்டாம் பாகம் எடுப்பதற்கு திட்டம் இருப்பதாக கூறினார்.
மேலும் அந்த பேட்டியில் விஜய் பற்றியும் பேசினார் விஜய் இப்பொழுது மிகப் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டார், அப்பொழுது அவர் மிகவும் பொறுமையாக இருப்பார் அதேபோல் மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பார் ஆனால் கேமரா முன்பு வந்து விட்டால் அவர் வேறு ஒரு ஆளாக மாறி விடுவார் என கூறினார்.