தமிழ் சினிமாவில் விஜய் படத்தின் மூலம் அறிமுகமாகிய இயக்குனர்கள்.! இதோ முழு லிஸ்ட்

தற்பொழுது திரையுலகில் முன்னணி பிரபல நடிகராக கொடிகட்டிப்  பறந்து வருபவர் நடிகர் விஜய் ஆவார். உலகம் முழுவதும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் இவர் திரையுலகில் ஒரு அங்கமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யை வைத்து அறிமுகமாகிய இயக்குனர்களையும் அவர்கள் இயக்கிய திரைப்படங்களையும் தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,

ரமணா -இவர் விஜய்யை வைத்து இயக்கிய முதல் படம் திருமலை இப்படம் 2003ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமானது. இத்திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார்.

செல்வபாரதி – இவர் நினைத்தேன் வந்தாய் என்ற திரைப்படத்தை 1998இல் விஜயை வைத்து இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரம்பா நடித்திருப்பார்.

பாலசேகரன் – இவர் 1997இல் லவ் டுடே என்ற திரைப்படத்தை விஜயை வைத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்திருப்பார். இத்திரைப்படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடி வெற்றி பெற்றது.

எழில் – இவர் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படத்தை 1999இல் விஜய் வைத்து இயக்கியுள்ளார். இப்படம் 175 நாட்கள் தியேட்டரில் ஓடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார்.

பேரரசு – இவர் விஜய்யை வைத்து 2005ஆம் ஆண்டில் திருப்பாச்சி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார்.

பிரபுதேவா – பிரபுதேவா 2007ஆம் ஆண்டில் போக்கிரி திரைப்படத்தை விஜயை வைத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார்.

பாபு சிவன் – பாபுசிவன் இவர் விஜய்யை வைத்து 2009ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமான வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அனுஷ்கா உட்பட இன்னும் சில முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ளார்கள்.

ரமணா மதேஷ் – ரமணா மதேஷ் இவர் 2004ஆம் ஆண்டில் மதுர படத்தை விஜய்யை வைத்து முதலில் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேஜாஸ்ரீ நடித்திருப்பார்.

மஜீத் – மஜீத் விஜய்யை வைத்து இயக்கிய முதல் திரைப்படம் தமிழன் திரைப்படம் 2002ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

அருண் பிரசாத் – அருண் பிரசாத் விஜய்யை வைத்து இயக்கிய முதல் படம் பத்ரி திரைப்படம் 2001ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

திரையுலகில் பல இயக்குனர்கள் விஜய் மூலமாகத்தான் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்கள்.

Leave a Comment