சம்பவம்னா இப்படி இருக்கணும்.. தளபதியின் கோட் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி கோட் படம் வெளியானது. பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்ததோடு சிவகார்த்திகேயன் திரிஷா என செம சர்ப்ரைஸ் கேமியோக்களும் இருந்தது.

அதேபோல் படம் முதல் நாளிலிருந்து வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. அதன் படி தற்போது வரை படத்தின் மொத்த வசூல் மட்டுமே 450 கோடியாக இருக்கிறது. ஆனாலும் ஜெயிலர் வசூலை தொடவில்லையே என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.

ஆனாலும் கோட் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 200 கோடி வரை வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே கடந்த வருடம் வெளிவந்த லியோ படமும் தமிழ்நாட்டில் 200 கோடி வசூலை நெருங்கி இருந்தது. அதை அடுத்து இரண்டாவது முறையாக தளபதி சம்பவம் செய்துள்ளார். இதை அவருடைய ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அவருடைய கடைசி படமான தளபதி 69 விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதன் அறிவிப்பு வெளிவந்த நிலையில் அடுத்த வருட அக்டோபருக்கு படம் வெளியாகிறது. அதுவும் தமிழ்நாட்டில் 200 என்ன 300 கோடி கூட வசூல் செய்யும் என ரசிகர்கள் இப்போதே ஆரவாரம் செய்து வருகின்றனர்.