விஜய் படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவுக்கே 10 கோடி தான் சம்பளம்.! ஆனால் சூர்யா பட இயக்குனருக்கு 30 கோடியா.! வாய்ப்பிளக்கும் தமிழ் சினிமா..

surya vijay
surya vijay

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன. இந்த நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து விடுதலை இரண்டாவது பாகம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விடுதலை இரண்டாவது பாகம் வெளியானதும் அடுத்ததாக வெற்றிமாறன் அவர்கள் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு சம்பளம் வாங்க போகிறார் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதி சூரி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது இதனைத் தொடர்ந்து எஸ் கலைப்புலி தானு அவர்கள் தயாரிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் வாடிவாசல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிரி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வெற்றிமாறனுக்கு எவ்வளவு சம்பளம் என்பது தற்பொழுது வெளியாகி உள்ளது வாடிவாசல் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாக எஸ் கலைப்புலி தானு கூறியிருந்தார் அதனால் இந்த திரைப்படத்தின் பட்ஜெட்டை பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை.

அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக வெற்றிமாறனுக்கு 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது   ஏனென்றால் விடுதலை திரைப்படத்திற்கு வெற்றிமாறன் அவர்களுக்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முன்னணி நடிகர்களுக்கு நிகரான சம்பளம் கொடுக்கப்பட இருப்பதால் ஹாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் இன்னொரு பக்கம் விஜயின் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த வருட இறுதியில் இந்த திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தளபதி 68 திரைப்படத்தை இயக்குவதற்காக வெங்கட் பிரபுவுக்கு 10 கோடி தான் சம்பளம் என கூறப்படுகிறது ஆனால் விஜய் படம் பாக்ஸ் ஆபிஸில் சாதாரணமாக 100 கோடி ரூபாய் அள்ளி வருகிறது அப்படி இருக்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு வெங்கட் பிரபுவுக்கு 10 கோடி தான் சம்பளம் ஆனால் வெற்றிமாறனுக்கு மட்டும்  25 முதல் 30 கோடி வரை சம்பளமாக கூறப்படுகிறது.

இது எந்த அளவுக்கு முழுமையான தகவல் என்று தெரியவில்லை அதேபோல் வெற்றிமாறன் மற்றும் வெங்கட் பிரபுவின் சம்பளமும் உறுதியாக வெளியாகவில்லை விரைவில் என்ன விவரம் என்பது தெரிய வரும்.