இளைய தளபதி விஜய்க்கு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மரணம்!!

0

vijay director died: இளையதளபதி விஜய் நடித்து மெகா ஹிட்டான திரைப்படங்கள் பல இருக்கின்றன. விஜயின் ஒரு சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் படத்தை ஓட வைத்து விடுவார்கள் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஏனென்றால் விஜய் பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் விஜய் மற்றும் அனுஷ்கா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டைக்காரன். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படத்தை பாபு சிவன்அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. அவர்களிடமிருந்து  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது.

வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் அவர்கள் உடல்நிலை குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரால் வெற்றிப்படம் கொடுக்க முடியாததால் பின் சன் டிவியில் சீரியல்களை இயக்கி வந்தார்.

இவர் இறந்ததை முன்னிட்டு விஜய் அவர்கள் இவருக்கு ஏதாவது உதவுவார் என பேசப்படுகிறது. இந்த இயக்குனரின் இறப்பு முன்னிட்டு விஜய் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.