வரலாற்றிலேயே முதல் முறையாக எந்த திரைப்படத்திற்கும் இல்லாமல் விஜய் படத்திற்கு கிடைத்த ஸ்பெஷல்.. உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
bigil
bigil

நடிகர் விஜய் உச்ச நடிகர்களில் ஒருவர் இவரின் திரைப்படம் திரைக்கு வந்தால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும். அதேபோல் விஜய் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு வேடத்தில் நடித்துள்ளார், அதேபோல் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக விஜயின் பிகில் திரைப்படத்திற்கு மகளிர்கான சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். திருகோணமலை பகுதியில் உள்ள நெல்சன் திரையரங்கில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாம்.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.