ஆக்சன் கதையை தவறவிட்ட விஜய்..! சரியான நேரம் பார்த்து நடித்த அஜித் – படம் பிளாக்பஸ்டர் ஹிட்.

0
vijay- and-ajith
vijay-and-ajith

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மைக்காலமாக சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் தற்பொழுது கூட தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங்காக படக்குழு தயாராகி வருகிறது. ஏகே 61 திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் விஜய்க்கு வந்த பட வாய்ப்பை தட்டிப்பறித்து அதில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார் அந்த படம் என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம்  தீனா.

இந்த திரைப்படம் அப்பொழுது திரையரங்கில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு அஜித்திற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அப்பொழுது கிடைத்ததாம்.

ஆனால் உண்மையில் தீனா திரைப்படத்தில் நடிக்க வேண்டியது விஜய் தான் என கூறப்படுகிறது தீனா படத்தின் கதையை எழுதிவிட்டு விஜய்யுடன் கூறியுள்ளார். ஏ ஆர் முருகதாஸ் ஆனால் விஜய்க்கு அந்த கதை பிடிக்காமல் போகவே பின் அஜித்திற்கு கை மாறியதாக கூறப்படுகிறது. அதை சரியாக பிடித்துக் கொண்டு வெற்றியை கொடுத்தார் அஜித்.