விஜயின் சம்பளத்தை வெளியிட்ட வருமான வரித்துறையினர்.! சம்பளத்தை கேட்டு தலை சுற்றி நிற்கும் தமிழ் சினிமா.!

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் படத்தை வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் பிகில் வரி ஏய்ப்பு புகாரில், கடலூரில் மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர், அப்போது வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினார்கள், இரண்டு நாட்கள் விசாரணையின் பொழுது இறுதியில் விஜய்யின் சில அறைகள், லாக்கர்கள் வருமானவரித்துறையினர் அடைத்து சீல் வைத்து விட்டு சென்றார்கள்.

இந்தநிலையில் பனையூரில் உள்ள விஜய்யின் பங்களாவிற்கு இன்று வருமான வரித்துறையினர் 3 வாகனங்களில் சென்றார்கள், முன்பு சீல் செய்யப்பட்ட அரை மற்றும் லாக்கரை திறந்து, அதிலிருந்த ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.

அதேபோல் பனையூரில் உள்ள விஜயின் அலுவலகத்திற்கும் வருமான வரித்துறையினர் சென்று ஆய்வு செய்தார்கள், இந்நிலையில் சோதனை நிறைவு பெற்றதால் வைக்கப்பட்ட சீல் அனைத்தும் அகற்றப்பட்டது, மேலும் விஜய்யின் சம்பள விவரத்தையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.

விஜய் பிகில் திரைப்படத்திற்கு மட்டும் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் 80 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது, அதேபோல் விஜய் முறையாக வருமான வரியை கட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்கள் வருமான வரித்துறையினர்.

Leave a Comment