அய்யயோ விஜய்க்கு கண்ணு தெரியாதா.? மாஸ்டர் திரைப்படத்தின் முழு கதையும் வேற லெவல்…

0

vijay master movie story revealed: தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன்முறையாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது, இந்த திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் கதை இதுதான் என தற்போது வைரலாகி வருகிறது. விஜய் கல்லூரி பேராசிரியராக ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார், அப்பொழுது வகுப்பில் பாடம் நடக்கும் நேரங்களில் கல்லூரிகள் இருக்கும்பொழுது குடி, கூத்து என அலப்பரை அடித்து வருகிறார்கள் மாணவர்கள்.

குடியால் தான் தனது இரு கண்களையும் இழந்து விடுகிறாராம் விஜய், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய விஜய் பிறகு மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பாதுகாப்பிற்காக பணிமாற்றம் செய்யப்படுகிறார்.

அங்குள்ள சிறுவர்கள் போதைக்கு அடிமையாவது, போதைப் பொருட்களை நேரடியாக விற்பதையும் கண்டுபிடிக்கும் விஜய் அதை யார் செய்கிறார் யார் இதை நேரடியாக விற்கிறார்கள் இதற்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை மாற்றுத்திறனாளி சிறுவர்களை வைத்து கண்டுபிடிக்கிறார்.

குழந்தைகளுக்கு நேரடியாக போதை பொருளை விற்கும் அர்ஜுன் தாஸ்சை முதலில் கண்டு பிடிக்கிறார் விஜய், அதன் மூலம் விஜய் இதற்கெல்லாம் யார் ஹெட் என்பதையும கண்டுபிடிக்கிறார், அர்ஜுன் தாஸின் அண்ணனான விஜய்சேதுபதி தான் இதையெல்லாம் செய்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு அவருடன் நேரடியாக களத்தில் மோதுகிறார்.

அதன் பிறகு ஹீரோ விஜய்க்கும் வில்லன் விஜய் சேதுபதிக்கும் நடக்கும் யுத்தம்தான் மாஸ்டர். விஜயின் வித்தியாசமான லுக் பார்க்கும் பொழுது இந்த கதை உண்மையானதாக கூட இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.