கோடி கோடியாக மாஸ்டர் திரைப்படத்திற்கு டீல் நிலவரம் தளபதியின் தரமான பதில்.! யாருகிட்ட இதாண்டா எங்கள் தளபதி

தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக நச்சுனு ஒரு செயல் செய்தது தற்பொழுது வெளியாகி விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி விஜய் கடைசியாக நடித்த பிகில் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது இந்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது இந்தியா முழுவதும் தற்பொழுது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது அதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும் ott பிளாட்பார்மில் வெளியாகி வருகின்றன.

அதேபோல் மாஸ்டர் திரைப்படத்தை ott யில் வெளியிட மாஸ்டர்  திரைப்படத்தின் தயாரிப்பாளர்களை  அணுகியதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவியது, இந்த நிலையில் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி பிரபல நிறுவனம் ஒன்று மாஸ்டர் திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க தயாராக இருப்பது உண்மைதான்.

இதுகுறித்து விஜயிடம் தயாரிப்பாளர் பேசிய பொழுது கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம் அதுமிலலாமல் தன்னுடைய படத்தை ரசிகர்கள் அனைவரும் ஒன்றாய் கூடி சந்தோசமாய் பார்க்கவேண்டும் நான் படம் நடிப்பதே அவர்களுக்காகத்தான் என கூறினாராம் விஜய், தளபதியின் இந்த பதில் விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

Exit mobile version