இரண்டு முன்னணி நடிகர்களின் திரை படத்துடன் மோதும் மாஸ்டர்.! அப்போ வசூல்.? பரபரப்பில் திரையுலகம்

கொரனோ பரவல் அதிகமானதால் திரையரங்கங்கள் முதல் படப்பிடிப்பு வரை அனைத்தும் மூடப்பட்டது, அதனால் சினிமா உலகமே முடங்கிக் கிடந்தது, அதுமட்டுமில்லாமல் பல திரைப்படங்கள் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் திரைப்படங்களை வெளியிட முடியாமல் போனது.

அதிலும் ஒரு சில திரைப்படங்கள் OTT இணையதளத்தில் வெளியிட்டார்கள், இந்த நிலையில் இந்த மாத இறுதியில் திரையரங்க உரிமையாளர்கள் ஒரு மீட்டிங் போட இருக்கிறார்கள் அந்த மீட்டிங்கில் எப்பொழுது திரையரங்கு திறக்கப்பட போகிறது என்பதை அதிகாரபூர்வமாக தெரிந்துவிடும் என தெரிகிறது.

இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக 2021 பொங்கலன்று ரிலீஸாகும் என ஒரு தரப்பில் இருந்து கூறப்படுகிறது, அதேபோல் கார்த்தியின் சுல்தான் திரைப்படமும் 2021 பொங்கல் அன்று ரிலீசாகும் என கூறுகிறார்கள் இப்படியிருக்க விஜய் திரைப்படத்துடன் சுல்தான் திரைப்படம் மோத இருப்பது ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் பொங்கல் ரேஸில் இன்னொரு முன்னணி நடிகரின் திரைப்படம் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் அடுத்த வருடம் 2021 பொங்கலன்று வெளியாகும், அதற்காக சுசீந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு சிம்பு அடுத்ததாக மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதனால் தான் இந்த திரைப்படத்தை விரைவில் முடிக்க இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

அப்படியிருக்கும் நிலையில் பொங்கலன்று விஜியுடன் சிம்பு மற்றும் கார்த்தி மோத இருப்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் ஏற்கனவே உள்ள நிலவரப்படி திரையரங்கில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே படத்தை காண முடியும் என தெரியும் இந்த நிலையில் இவர்களின் திரைப்படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Leave a Comment