இரண்டு நடிகைகளுக்கு குறி வைக்கும் விஜய்..? எல்லாம் எம்ஜிஆர் கத்துக்கொடுத்த வித்தை தானா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் இறங்க போகிறார் என்று சில தகவல் அரசல் புருசலாக வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

அதாவது நடிகர் விஜய் அவர்கள் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும்போதே அரசியலில் இறங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள் படும் அவஸ்தையை பார்த்து அரசியலின் ஆழத்தை முழுமையாக தெரிந்து கொண்டு அரசியலில் இறங்க காத்திருக்கிறாராம் நடிகர் விஜய். அது மட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டு அரசியலில் இறங்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் வழியவே நடிகர் விஜய் அவர்கள் பின்பற்றுகிறார் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் ஆரம்பத்தில் அரசியலில் வந்த போது தன்னுடைய கட்சியை மக்களுக்கு கொண்டு சேர்க்க நடிகைகளை வைத்து திட்டம் தீட்டினார்.

அதற்காக தன்னுடைய அரசியல் உறுப்பினராக இரண்டு நடிகைகளை களம் இறக்கினார் எம்ஜிஆர். அதன் பிறகு மூன்றாவதாக எம்ஜிஆர் உடன் அரசியலில் இறங்கியவர் நடிகை லதா பின்னர் நடிகை ஜெயலலிதாவையும் வைத்து தன்னுடைய கட்சியை மக்களுக்கு கொண்டு சேர்த்தார் எம்ஜிஆர்.

இப்படி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் எப்படி தன்னுடைய கட்சியை மக்களுக்கு கொண்டு சேர்த்தாரோ அதேபோல நடிகர் விஜய்யும் தன்னுடைய கட்சியை மக்களுக்கு கொண்டு சேர்க்க இரண்டு நடிகைகளை வைத்து திட்டமிட்டு இருக்கிறாராம். அதற்காக தான் நடிகை திரிஷாவை 13 ஆண்டுகள் கழித்து தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

திரிஷா மட்டுமல்லாமல் நயன்தாராவை வைத்தும் தன்னுடைய கட்சியை மக்களுக்கு கொண்டு சேர்க்க நினைக்கிறார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா தான் விஜயின் மக்கள் இயக்க கொடியை தேர்வு செய்தார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் திரிஷா இருவரையும் வைத்து தன்னுடைய கட்சியை மக்களுக்கு கொண்டு சேர்க்க விஜய் அவர்கள் பக்கா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக நடிகை நயன்தாராவை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைக்க விஜய் அவர்கள் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment