தொடர்ந்து 5 இயக்குனர்களை வரிசையில் நிறுத்திய விஜய்.! இதுல நீங்கள் விரும்பிய கூட்டணி இருக்கா.!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன்  இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தந்தது.

அதன்பிறகு தளபதி விஜய் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த படத்தின் இயக்குனர் வம்சி.  இவர் இயக்கத்தில் தளபதி 66 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு காட்சிகள்  நடைபெற்று.

இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  தளபதி அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளார் இந்த திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனால் விஜயும் லோகேஷ் கனகராஜ்  உடன்  அடுத்த திரைப்படத்தில் இணைய உள்ளார்கள். இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.

இதையடுத்து வெற்றிமாறன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இவர்களுடன் கூட்டணி வைக்க விஜய் முடிவெடுத்துள்ளார்.  மேலும் வெற்றிமாறன் விஜய்யுடன் முதன் முதலில் இணைய இருப்பதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெற்றிமாறன் விடுதலை மற்றும்  வாடிவாசல் போன்ற பாடங்களில் ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் நிறைவடைந்ததும் அடுத்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி அடுத்தடுத்த திரைப்படங்கள்  வர  இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு சீக்கிரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment